தமிழ்நாடு

tamil nadu

நிரம்பும் சோத்துப்பாறை அணை;வராக நதி கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Aug 1, 2022, 1:25 PM IST

சோத்துப்பாறை அணை 121 அடியை எட்டியதால், வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை

தேனி:பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால், அணையின் நீர் மட்டம் 72 அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் இன்று (ஆக.1) காலை 8 மணி அளவில் 121 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பெரியகுளம் பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.

கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு நீர் வரத்தானது 140 கன அடியாக உள்ளது. மேலும் கனமழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவான 126.28 எட்டும் நிலையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையில் இருந்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொப்புள் கொடி காயும் முன் பச்சிளம் குழந்தையை ஆற்றில் வீசிய கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details