தமிழ்நாடு

tamil nadu

'எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என உருண்டு புரண்டுகொண்டிருக்கும் ஸ்டாலின்'

By

Published : Dec 31, 2020, 7:01 AM IST

தேனி: இன்றைக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் அதனைத் தடுத்து நிறுத்தி எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் உருண்டு புரண்டுகொண்டிருக்கிறார் என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

opr
opr

தேனி மாவட்டம் போடியில் கூட்டுறவுத் துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் விழா நேற்று (டிச. 30) நடைபெற்றது. போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.

போடியில் ஓபிஆர் தேர்தல் பரப்புரை


முன்னதாக இவ்விழாவில் கலந்துகொண்ட கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோரும் உரையாற்றினர்.

இதில் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், “தமிழ்நாடு அரசின் நிதிச்சுமையிலும் பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பரிசுத் தொகையை அரசு வழங்கிவருகிறது.

சென்ற ஆண்டு ஜெயலலிதா இருக்கும்போது ஆயிரம் ரூபாய் வழங்கி பொங்கல் பரிசு அளிக்கப்பட்டது(தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்ற ஆண்டுதான் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால் அதை மறந்த ஓபிஆர், சென்ற ஆண்டு ஜெயலலிதா (ஜெ. மறைவு-2016) இருக்கும்போது பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியதாக உரையாற்றினார்)

இன்றைக்கு ஜெயலலிதா வழியில் தொடர்கின்ற இந்த அரசு ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு பொருள்களை வழங்கியுள்ளது" என்றார்.

மேலும் அவர், "இன்றைக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் அதனைத் தடுத்து நிறுத்தி எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் உருண்டு, புரண்டுகொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 82.4 விழுக்காடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன - தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details