தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கட்சிப்பிரமுகரின் இல்ல விழாவில் ஹெச். ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'எனது வாக்கு வங்கிக்காக NIA விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டாரா? என தெரியவில்லை.

ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உண்டு. ஆளுநரை அவதூறாகப் பேசுவதை திருமாவளவன் மற்றும் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். சீமான் மக்களை மாநில, மொழி, இனம் என பிரிவினையைத்தூண்டி அதன் மூலம் குளிர் காயக்கூடியவர்.
வருகிற மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய அளவில் கூட்டணி அமையும். கடந்த சட்டப்பேரவைத்தேர்தலின்போது அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்த நிலையில், வரும் மக்களவைத்தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமையும். சட்டப்பேரவைத்தொகுதி வேறு, மக்களவைத் தொகுதி வேறு' என்றார்.
இதையும் படிங்க:துரோக மாடல் ஆட்சி: ஆவின் பால் விலை உயர்வைக்கண்டித்து ஓபிஎஸ் விமர்சனம்