தமிழ்நாடு

tamil nadu

போடி முதல் தேனி வரையிலான இறுதிகட்ட ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

By

Published : Dec 29, 2022, 11:01 PM IST

Updated : Dec 29, 2022, 11:09 PM IST

தேனி வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரத்தை 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்று 9 நிமிடங்களில் கடந்து ரயில் இன்ஜினின் இறுதிகட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

போடி- முதல் தேனி வரையிலான அதிவேக ரயில்- இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்
போடி- முதல் தேனி வரையிலான அதிவேக ரயில்- இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்

போடி முதல் தேனி வரையிலான இறுதிகட்ட ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

தேனி: அருகேபோடிநாயக்கனூர் முதல் தேனி இடையே அகல ரயில் பாதைக்கான பணிகள் முடிவு பெற்று ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ரயில் தண்டவாளங்களில் உள்ள அதிர்வுகளை கணக்கிடவும் மற்றும் தண்டவாளங்கள் உள்ள குறைபாடுகளை கண்டறியும் ரயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று இறுதிகட்டமாக போடிநாயக்கனூர் முதல் தேனி வரையிலான ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மூன்று பெட்டிகளுடன் போடிநாயக்கனூரில் இருந்து தேனி வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரத்தை 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்று 9 நிமிடங்களில் கடந்து ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தெற்கு ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் இளம்பூரணம் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தில் தண்டவாளங்களில் ஏற்படுகிற அதிர்வுகளையும் கணக்கிடவும்; ரயில் என்ஜின் அதிவேகத்தில் செல்லும்போது தண்டவாளத்தில் இருக்கின்ற குறைபாடுகளை கண்டறியவும் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டத்திற்கு முன்னதாக தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், தேனி ரயில் நிலையத்திலிருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வினைத் தொடங்கினார்.

முன்னதாக தேனி ரயில் நிலையத்தில் தேனி முதல் போடிநாயக்கனூர் இடையே ரயில் இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள பிளாக் இன்ஸ்ட்ருமென்ட், கணிப்பொறித் திரை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்பு தேனி அருகே உள்ள வாழையாறு ஆற்றுப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க:தலாய் லாமாவை உளவு பார்த்ததாக புகார் - பீகாரில் சீனப் பெண் கைது!

Last Updated :Dec 29, 2022, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details