தமிழ்நாடு

tamil nadu

தேனியில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி

By

Published : May 16, 2019, 10:02 AM IST

தேனி: பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் முப்படைகள் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றனர்.

File pic

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போட்டியானது வைர விழா கொண்டாட்டத்துடன் தொடங்கியது.

பெரியகுளம் பி.எஸ்.டி மைதானத்தில் மே 15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டிகள், நாக் - அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருக்கின்றன.

அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி

அகில இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய தரைப்படை, விமானப்படை, கப்பற்படை, தெற்கு ரயில்வே, கேரள மின்வாரியம், பெங்களுரூ விஜயா வங்கி, செகந்திராபாத், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன.

முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூபிலி விளையாட்டுக் கழக அணியும், செங்கோட்டை கூடைப்பந்தாட்ட கழக அணியும் களமிறங்கின. இதில் செங்கோட்டை அணி வெற்றி பெற்றது.

sample description

ABOUT THE AUTHOR

...view details