தமிழ்நாடு

tamil nadu

மரங்களின் வரலாற்றை அறியும் QR கோடு: சுற்றுலா பயணிகளை கவர்ந்த அறிவிப்பு!

By

Published : Jul 14, 2023, 10:09 AM IST

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களின் வரலாற்றை அறியும் வகையில் கியூஆர் கோடு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Ooty Botanical garden
உதகை

மரங்களின் வரலாற்றை அறியும் QR கோடு

நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.

அப்போது கண்காட்சிகள், சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம். இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வந்து செல்வர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடம், அலங்கார வேலிகள் போன்ற இடங்களில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, கேரட், பாகற்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி, மற்றும் பழ வடிவங்களில் இருக்கைகள் அமைக்கும் பணி முடிந்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதே போன்று பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக கியூஆர் (QR code) கோடு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: உதகையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

இந்த பூங்காவில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரம், ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஐலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களின் உயரத்தை பார்த்து ஆச்சரியப்படும் சுற்றுலாப் பயணிகள், அவற்றின் வரலாறு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த கியூஆர் கோடு அறிமுகம் செய்யும் பணி தற்போது துவங்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் அந்த மரம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எப்போது நடவு செய்யப்பட்டது, எந்த நாட்டைச் சேர்ந்தது, இவற்றின் மூலிகை தன்மை குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளலாம். முதல் கட்டமாக 100 மரங்களுக்கும் பின்னர் 1000 மரங்களுக்கு க்யூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கும் பணி விரைவில் முடிவடைந்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: என்னைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்கும் - எம்எல்ஏ பழனி நாடார்

ABOUT THE AUTHOR

...view details