நீலகிரி:குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் அதிகாலை, கரடி ஒன்று கேட்டின் மீது ஏறி இறங்கியுள்ளது.
அப்போது அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், கரடியை கண்டு அச்சமடைந்து ஒட்டம் பிடித்துள்ளனர். தற்போது கரடி உலா வருவது தொடர்பான காணொலி பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.