தமிழ்நாடு

tamil nadu

ராணுவ முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உதகை வந்த குடியரசுத் தலைவர்

By

Published : Aug 4, 2021, 4:25 AM IST

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ராணுவ விமானம் மூலம் சூலூர் விமானப்படை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

president-ramnath-kovind-at-ooty-warm-welcome-tn-ministers
வெலிங்க்டன் ராணுவ முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உதகை வந்த குடியரசு தலைவர்

நீலகிரி:ஐந்து நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று(ஆகஸ்ட் 3) காலை சென்னையில் இருந்து ராணுவ விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு, அவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி, சாமிநாதன், கயல்விழி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

குடியரசு தலைவரை வரவேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு

இதனையடுத்து அங்கிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹெலிகாப்டர் மூலம்உதகை சென்றார். இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், இரண்டு நாள் ஓய்விற்குப் பின்பு 6ஆம் தேதி மீண்டும் கோவை வழியாக டெல்லி திரும்புகிறார்.

இதையும் படிங்க:குடியரசு தலைவர் வருகை : நீலகிரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details