தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாற்று நடவுப்பணிகள் தொடக்கம்!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக நாற்று நடவுப்பணிகள் இன்று கொட்டும் மழையிலும் தொடங்கியது.

நாற்று நடவுப்பணி தொடக்கம்
நாற்று நடவுப்பணி தொடக்கம்

By

Published : Jul 22, 2021, 5:09 PM IST

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலத்தில் மே இறுதி வாரத்தில் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் உள்ளிட்ட இரண்டாவது சீசன் காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

தற்போது இரண்டாவது சீசனுக்காக இன்று (ஜூலை.22) ஒரு லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகளின் நடவுப்பணிகள் தொடங்கின. இதில் ஜெர்மன், பிரான்ஸ், நெதர்லாந்து அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைத் தாயகமாக கொண்ட 75 தாவர வகைகளில் டேலியா, சால்வியா பிகோனியா, லில்லியம் / பிளக்ஸ், பேன்சி, டெல்பினியம், பெட்டூனியா, ஸ்டாக்ஸ், லுபின், ஆஸ்டர், ஸ்வீட் வில்லியம், ஜின்னியா, போன்ற மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

நாற்று நடவுப்பணிகள் தொடக்கம்

தற்போது கொட்டும் மழையிலும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்புக் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பூங்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் ஆடிதபசு விழா: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

ABOUT THE AUTHOR

...view details