தமிழ்நாடு

tamil nadu

குன்னூரில் கட்டபொம்மன் சிலைக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்த கோரிக்கை

By

Published : Jan 3, 2022, 10:53 PM IST

Tributes paid to Veerapandiya Kattabomman: குன்னூரில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கட்டபொம்மன் சிலைக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்த கோரிக்கை
கட்டபொம்மன் சிலைக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்த கோரிக்கை

Tributes paid to Veerapandiya Kattabomman: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவத்தினர் சார்பில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய நிர்வாகம் சார்பில் 6.5 லட்சம் ரூபாய் செலவில், ராணுவ மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அமைக்கப்பட்டது.

ஆனால் அவரது சிலைக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்தாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்டபொம்மன் சிலைக்கு ராணுவத்தினர் மரியாதை செலுத்த கோரிக்கை

ஆண்டுதோறும் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:EXCLISIVE VIDEO: ரயில்வே டிக்கெட் கவுன்டரில் கொள்ளை - பரபரப்பு காணொலி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details