தமிழ்நாடு

tamil nadu

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியாகின

By

Published : May 18, 2022, 5:27 PM IST

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணியை சிறுத்தை ஒன்று வேட்டையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் வரும் இந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியானது
கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியானது

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் உணவு மற்றும் குடிநீருக்காக இவ்விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி கேர்பேட்டா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இவ்வாறு குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை, சசிகுமார் என்பவரின் வளர்ப்பு நாயை வேட்டையாடச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு பிராணியை வேட்டையாடும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியானது

இதைக் கண்ட பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து இதுபோல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் உடனடியாக வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடும் சிறுவன்: சிசிடிவி காட்சி வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details