தமிழ்நாடு

tamil nadu

கேரட் விலை குறைவால் விவசாயிகள் கவலை

By

Published : Apr 13, 2022, 2:20 PM IST

கடந்த சில நாள்களாக கேரட் விலை குறைவால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

கேரட் விலை குறைவால் விவசாயிகள் கவலை
கேரட் விலை குறைவால் விவசாயிகள் கவலை

நீலகிரி: தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதில் அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. அதனை மீறியும் கடன் பெற்று சில விவசாயிகள் கேரட் பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் கேரட் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த சில நாள்களாக கேரட் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனைக்கி வந்த நிலையில், தற்போது கிலோ 25 முதல் 45 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

கேரட் விலை குறைவால் விவசாயிகள் கவலை

இந்நிலையில் முதலீட்டிற்காக செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கேரட் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:உலகச் சந்தைகளை உலுக்கி எடுத்த அமெரிக்க பணவீக்கம்

ABOUT THE AUTHOR

...view details