தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - சிதைவு பாகங்கள் சேகரிப்பு

By

Published : Dec 14, 2021, 10:34 PM IST

Updated : Dec 15, 2021, 9:43 AM IST

நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு விமானப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

நீலகிரி:முப்படைகளின் சார்பில் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் மற்றும் அவரது விசாரணைக்குழுவினர் கடந்த 6 நாள்களாக விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டும், அப்பகுதியைச் சார்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியை ராணுவம் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அப்பகுதியை ஆய்வு செய்த ராணுவ விமானப்படையினர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிதைந்த பாகங்களை சேகரித்து வருகின்றனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

சேகரிக்கப்படும் பாகங்களை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லவுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி - முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 1,085 பேருக்கு வேலை

Last Updated : Dec 15, 2021, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details