ETV Bharat / city

சென்னை ஐஐடி - முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 1,085 பேருக்கு வேலை

author img

By

Published : Dec 14, 2021, 7:31 PM IST

சென்னை ஐஐடியில் டிசம்பர் 10 ந் தேதி வரையில் நடைபெற்ற முதல் கட்ட வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை இல்லாத அளவில் 1,085 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்வார்கள்.

அவர்களுக்கு நிறுவனங்கள் மூலம் நேரடியாக தேர்வுச் செய்யப்படுவர். முதல் கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 226 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு

முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், மொத்தம் 226 நிறுவனங்கள் பங்கேற்று, 1,085 பேருக்கு வேலை வழங்கியுள்ளன. அவற்றில் சர்வதேச நிறுவனங்களில் 45 பேருக்கும் வேலை கிடைத்துள்ளன. மேலும் 62 தொடக்க நிறுவனங்கள் 186 பேருக்கு வேலை வழங்கி இருக்கிறது.

மேலும், முதல் கட்ட வேலைவாய்ப்பு நிகழ்ச்சிக்கு முன்பே, பயிற்சி பெற்றவர்களில் 231 பேர் வேலைவாய்ப்பை பெற்றனர். எனவே, முதல் கட்ட வேலை வாய்ப்பு முடிவில் 1,316 பேர் வேலை பெற்றனர்.

இதுகுறித்து, சென்னை ஐஐடி-யின் வேலைவாய்ப்பு ஆலோசகர் பேராசிரியர் சி.எஸ்.சங்கர் ராம் கூறுகையில், "சென்னை ஐஐடி பயிற்சியின் தரம் மற்றும் மாணவர்களின் ஒட்டு மொத்த மேம்பாடு ஆகியவை இந்தாண்டு முதல் கட்ட வேலைவாய்ப்பில் வெளியாகி இருக்கிறது. 2ம் கட்ட வேலை வாய்ப்பில், இன்னும் அதிக நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பை உருக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள், துறைகள் குறித்த விவரம்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாப்ட் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, கோல்ட்மேன் சாக்ஸ், ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அண்டு டுப்ரோ உட்பட பல முன்னணி நிறுவனங்கள் முதல் கட்ட வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலை வழங்கி உள்ளன.

மேலும், முதல்கட்ட வேலை வாய்ப்பு முகாமில், தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுத்துறையில் 19 விழுக்காடும், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடையத்துறையில் 42 விழுக்காடும், நிதி மற்றும் ஆலோசனைத்துறையில் 7 விழுக்காடும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் 18 விழுக்காடும், மேலாண்மைத்துறையில் 6 விழுக்காடும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் 8 விழுக்காடும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பின்பற்றாதது சமூக நீதிக்கு எதிரானது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.