தமிழ்நாடு

tamil nadu

75ஆவது காலாட்படை தினம்!

By

Published : Oct 28, 2021, 11:11 AM IST

75th Infantry Day ceremony  Infantry Day ceremony  Infantry Day  காலாட்படை தினம்  75ஆவது காலாட்படை தினம்  காலாட்படை தினம் கொண்டாட்டம்  nilgiris news  nilgiris latest news  நீலகிரி செய்திகள்

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில், 75ஆவது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி:கடந்த 1947ஆம் ஆண்டு, அக்டோபர் 27ஆம் தேதி அன்று காலாட்படையினர் ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, எதிரிகளிடமிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். நமது காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சார்பில், நேற்று (அக்.27) 75ஆவது காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

75ஆவது காலாட்படை தினம்

இதனைத் தொடர்ந்து, இந்த விழாவில் காலாட்படை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ், கலோன் எம் ஆா் சி காமண்டன்ட் ராஜேஷ்வர் சிங் மற்றும் ராணுவப் படை, விமான படை, கப்பல் படை அலுவலர்கள் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர். இதையடுத்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 சோதனை வெற்றி

ABOUT THE AUTHOR

...view details