தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் அருகே தொடர்ந்து உலா வரும் 3 கரடிகள்: பொதுமக்கள் அச்சம்

By

Published : Aug 2, 2022, 8:00 PM IST

குன்னூர் அருகே கிராமத்தில் உலா வந்த 3 கரடிகள்: பொதுமக்கள் அச்சம்

குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் உலா வரும் 3 கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலகிரி:மாவட்டத்தில் சமீபகாலமாக கிராமப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகேவுள்ள அளக்கரை கிராம பகுதியில் கடந்த 8 மாதங்களாக இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தபடி உணவு தேடி கரடி வருகிறது.

கரடிகள்

தற்போது இரண்டு குட்டி கரடிகள் பெரிய கரடிகளாக வளர்ந்ததை தொடர்ந்து மூன்று கரடிகளாக மீண்டும் அப்பகுதிக்கு வருகின்றன. தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கரடி தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

மனிதர்களை கரடிகள் தாக்கும் முன்னதாக வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து 3 கரடிகளை பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கடல் சீற்றத்தில் சிக்கிய விசைப்படகு - வெளியான திக்திக் காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details

தொடர்புடைய கட்டுரைகள்