தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் மூளைச்சாவு அடைந்த நாகை இளைஞர் உடல் உறுப்புகள் தானம்!

தஞ்சையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தங்கள் மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

By

Published : Jun 7, 2023, 12:33 PM IST

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூர்:நாகை மாவட்டம், கொளப்பாடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனிவேல். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் முகேஷ் (வயது 26). நாகையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். இவருடைய வருமானத்தில் தான் அவருடைய குடும்பம் செயல்பட்டு வந்து உள்ளது. இவரது தகப்பனார் பழனிவேல் சுமை தூக்கும் பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் முகேஷ் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று உள்ளார். அப்போது நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்குச் சொந்த வேலை காரணமாக சென்று உள்ளார். அப்போது திருப்பூண்டி என்ற இடம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது இவரது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறியது. இதனால் கீழே விழுந்த முகேஷ் விபத்துக்கு உள்ளாகினார்.

இதனால் மூளையில் அடிபட்டு பலத்த படுகாயம் அடைந்த முகேஷ் நாகையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்ததுள்ளார். இந்த நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த முகேஷ் மூளைச்சாவு அடைந்து விட்டதாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜூன் 6 ஆம் தேதி நேற்று தெரிவித்தனர்.

இதனை அடுத்து முகேஷின் பெற்றோர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்களை வாழ வைக்கலாம் என முடிவெடுத்தனர். தங்கள் மகன் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக முழுமனதுடன் சம்மதம் தெரிவித்து கையெழுத்து இட்டு மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இவர்களது இந்த முடிவை கேட்ட அரசு மருத்துவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இறந்த முகேஷின் கண்கள், கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த உடல் உறுப்புகள் தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெறுவார்கள். இது குறித்து அவரது உறவினர் சுரேஷ் என்பவர் கூறும் போது, “முகேஷ் இறந்தாலும் அவரது உடல் உறுப்புகள் நான்கு பேரை வாழ வைக்கும் அவர் இறக்கவில்லை இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளனர். இது போன்று சமுதாய நோக்கத்துடன் மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிகழ்வு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ஹெல்மெட் அணிந்தால் வெள்ளி காயின்.. தஞ்சை மக்களுக்கு பரிசு மழை.. டிராஃபிக் போலீஸ் புதிய ஐடியா!

ABOUT THE AUTHOR

...view details