தமிழ்நாடு

tamil nadu

உடல் இயக்கத்தைக் கண்காணிக்கும் கருவி: அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!

By

Published : Oct 30, 2020, 2:29 PM IST

தஞ்சாவூர்: உடல் இயக்கத்தைக் கண்காணிக்கும் தானியங்கி கருவியை அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.

உடல் இயக்கத்தை கண்காணிக்கும் தானியங்கி கருவி கண்டுபிடித்து அரசு இன்ஜினியரிங்  மாணவர்கள் சாதனை!
உடல் இயக்கத்தை கண்காணிக்கும் தானியங்கி கருவி கண்டுபிடித்து அரசு இன்ஜினியரிங் மாணவர்கள் சாதனை!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அழகரசன், செல்வி ரீத்திகா, செல்வி, ஷாஹீன், பேகம், கிருத்திக் ஸ்ரீராம் ஆகிய மாணவர்கள் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்தகுமார் அறிவுறுத்தலின்படி, துறைத் தலைவி கவிதா வழிகாட்டுதலோடு உடல் இயக்கத்தை கண்காணிக்கும் தானியங்கி கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கருவியானது மனித ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதோடு மாரடைப்பையும் முன்கூட்டியே கண்டறிந்து தெரிவித்துவிடும்.

மேலும்க் இந்த கருவிக்கு ஆறு மீட்டர் தொலைவில் இருக்கும் கோவிட்-19 பாதித்த நபர்களைக் கண்டறிந்து நமக்கு எச்சரிக்கை ஒலியும் எழுப்பும். இந்த அனைத்துத் தகவல்களும் மாணவர்களால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை மொபைல் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த நவீன தானியங்கி கருவியை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாக மருத்துவ அலுவலர் பிரபாகரன் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் பேராசிரியர்கள் சாதனைபுரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details