தமிழ்நாடு

tamil nadu

மொகரம் பண்டிகை; அல்லா கோயிலில் இந்துக்கள் தீமிதி திருவிழா!

By

Published : Sep 12, 2019, 1:08 PM IST

தஞ்சாவூர்: மொகரம் பண்டிகையை முன்னிட்டு, காசவளநாடு புதூரில் உள்ள அல்லா கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கிராம மக்கள் தீமிதித்து வழிபட்டனர்.

Hindus celebrates Muharram

தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக அல்லாவுக்கு விழா எடுத்து அந்த ஊரில் உள்ள இந்து மக்கள் கொண்டாடிவருகின்றனர். இங்கு ஒரு இஸ்லாமிய குடும்பம் கூட வசிக்கவில்லை. இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

அந்தவகையில், இந்தாண்டு மொகரம் பண்டிகையையொட்டி அல்லா சாமி என்றழைக்கப்படும் 'உள்ளங்கை' உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து, இரவு ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. அப்போது உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக முக்கிய வீதிகளில் எடுத்துச் சென்றனர்.

இந்துக்கள் மொகரம் பண்டிகை கொண்டாட்டம்

அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர். மேலும், அக்கோயில் முன் தீமிதி விழா நடந்தது. அதில், ஏராளமானோர் தங்கள் வேண்டுதல் நிறைவேற தீமிதித்து அல்லாவை வழிபட்டனர்.

Intro:தஞ்சாவூர் செப் 12

தஞ்சாவூர் அருகே, முஸ்லிம்கள் ஒருவர் கூட வசிக்காத கிராமத்தில், மொகரம் பண்டிகையை, ஹிந்துக்கள் கொண்டாடினர்.
Body:
தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து, அந்த ஊரில் உள்ள ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இங்கு ஒரு, முஸ்லிம் குடும்பமோ, அல்லது முஸ்லிமோ வசிக்கவில்லை .இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகைக்கு, இருந்து, அல்லா சாமி என்றழைக்கப்படும், 'உள்ளங்கை' உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு பூஜை செய்து வழிபடுவர். தொடர்ந்து, இரவு, ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டது. உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக, அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர்.அல்லா கோவில் முன், தீ மிதி விழா நடந்தது. ஏராளமானோர், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டி, தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011

ABOUT THE AUTHOR

...view details