தமிழ்நாடு

tamil nadu

தஞ்சையில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை எதிர்த்து போராடிய விவசாயிகள் கைது

By

Published : Dec 10, 2022, 7:37 PM IST

கும்பகோணத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் அனுமதி இல்லாமல் போராடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் விவசாயிகள் கைது
தஞ்சையில் விவசாயிகள் கைது

தஞ்சையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் செயல்பட்டு வந்த திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை, கடந்த 2017ஆம் ஆண்டு ஆலை நலிவடைந்ததாக கூறி மூடப்பட்டது. இதனால் அதே ஆண்டு ஆலைக்கு அரவைக்கு அனுப்பிய கரும்பிற்கான நிலுவை தொகை சுமார் ரூ.100 கோடி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர ஆலை நிர்வாகம் மோசடியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் பேரில், பல்வேறு வங்கிகளில் ரூ.300 கோடி அளவிற்கு கடன் பெற்று பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த நிறுவனத்தை கால்ஸ் டிஸ்லரீஸ் என்ற தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் ’கரும்பு விவசாயிகளுக்காண நிலுவை தொகை மற்றும் வங்கி கடனை முழுமையாக வழங்காமல், புதியதாக வாங்கிய நிறுவனத்தை அங்கு தொழில் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன் பின் அந்த நிறுவனம் நிலுவை தொகையில், 57 சதவீதம் மட்டும் வழங்குவதாகவும், அதுவும் நான்கு தவணைகளாக வழங்குவதாக அறிவித்தது, மேலும் வங்கி கடனை ஏற்க முடியாது என்றும் அறிவித்துவிட்டது.

ஆகவே, நிலுவை தொகை ரூபாய் 100 கோடி மற்றும் வங்கி கடன் ரூபாய் 300 கோடியையும் வட்டியுடன் முழுமையாக உடன் திரும்ப வழங்க கோரி, கடந்த மாதம் நவம்பர் 30ஆம் தேதி புதன்கிழமை முதல் இரவு பகலாக, ஆலை முன்பு நூற்றுக்கணக்காண கரும்பு விவசாயிகள் அங்கேயே தங்கி, உண்டு உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், இன்று (டிசம்பர் 10) 11ஆவது நாளாக அங்கு காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், திருமண்டங்குடியில் போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியை சேர்ந்த விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திட காவல்துறை அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி, விவசாய சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரையும் கவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க:மாண்டஸ் புயல் தாக்கம்: அறுவடை நிலையில் இருந்த வாழைகள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details