தமிழ்நாடு

tamil nadu

கரோனா 3ஆம் அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எம்எல்ஏ

By

Published : Aug 1, 2021, 9:33 PM IST

பட்டுக்கோட்டையில் கரோனா மூன்றாவது அலை குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கரோனா 3ஆவது அலை குறித்து எம்எல்ஏ விழிப்புணர்வு
கரோனா 3ஆவது அலை குறித்து எம்எல்ஏ விழிப்புணர்வு

தஞ்சாவூர்: கரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறைந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. இந்தநிலையில் தற்போது தொற்று பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் ஆணையர் சென்னுகிருஷ்ணன் தலைமையில் மணிக்கூண்டு பகுதியில் பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

கரோனா 3ஆவது அலை குறித்து எம்எல்ஏ விழிப்புணர்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இதில் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்பு அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறி, பயணிகளிடம் கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை, பாதுகாப்பாக இருப்பது குறித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், வட்டாட்சியர் தரணிகா, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது: மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details