தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் மாளிகை முற்றுகை: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

By

Published : Nov 26, 2022, 6:23 PM IST

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை மாற்றக்கோரி டிசம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடும்.

ஆளுநரை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம் அறிவிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி
ஆளுநரை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம் அறிவிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி

தஞ்சாவூர்:பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்த மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு போட்டி அரசாங்கம் நடத்துகிறார்கள். அந்த சனாதனத்தை ஆதரித்து ஆளுநர் பேசுகிறார்.

தற்போது இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்தது காரல் மார்க்ஸ் என பேசுகிறார். எனவே உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை மாற்றக்கோரி டிசம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடும்.

மேலும் மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டங்களை மீறி நடந்து வருவதாக உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நடைபெறும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை முடிவு கொண்டு வரும் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகிறது. அந்த வாக்குறுதிகள் எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.

மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறியது, அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என முத்தரசன் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு இல்லாமல் மின் கட்டணம் கட்டலாம் என மின்துறை அமைச்சர் கூறுகிறார். தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இதே போல் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கக் கூறுகிறது. அவ்வாறு ஆதார் இணைக்கப்படாவிட்டால் வாக்களிக்கும் உரிமை பறிபோகும் நிலை ஏற்படலாம்.

தற்போது வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையோ என எண்ண தோன்றுகின்றது. இதனை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். பேட்டியின் போது அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

ஆளுநரை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம் அறிவிப்பு: கம்யூனிஸ்ட் கட்சி

இதையும் படிங்க: வட இந்தியர்கள் தமிழகத்தில் ஊடுருவல் - குற்றஞ்சாட்டும் திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details