ETV Bharat / state

வட இந்தியர்கள் தமிழகத்தில் ஊடுருவல் - குற்றஞ்சாட்டும் திருமாவளவன்

author img

By

Published : Nov 26, 2022, 2:49 PM IST

இந்துக்கள் என்கிற மத வெறி தேசியத்தை கையாண்டு வரும் பாஜக, சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Thirumavalavan  BJP  Thirumavalavan alleges BJP  nationalism  religious bigotry nationalism  BJP is dealing with religious bigotry nationalism  trichy news  trichy latest news  thirumavalavan speech  thirumavalavan criticize bjp  பாஜக  மத வெறி தேசியத்தை கையாளும் பாஜக  திருமாவளவன்  விசிக தலைவர் திருமாவளவன்  விசிக  சிபிஐ செயலாளர் முத்தரசன்  தொல் திருமாவளவன்  மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது  சனாதனம்  ஒபிசி  எஸ்சி  எஸ்டி  மத வெறி  சிறுபான்மை மக்கள்
திருமாவளவன்

திருச்சி: இந்தித் திணிப்புக்கு எதிராக ஒற்றை ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்ட மாற்றணிக்காக என்கிற மையக்கருத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) அமைப்பின் பொது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் பதவி விலக வேண்டும், இந்தி திணிப்புக்கு எதிராக மொழி சமத்துவத்திற்கு எதிராக போராட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “சனாதன பாசிசத்தை எதிர்த்து அனைத்து முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாற்று அணி தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்திய அளவில் தேவைப்படுகிறது. சனாதன பாஸிசத்தை வீழ்த்த நம்மை ஒன்றிணைத்ததற்கு பாஸிசவாதிகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்.

இஸ்லாமிய அமைப்புகளை மதவாத அமைப்புகளாக பார்த்தவர்கள் இன்று பாசிஸத்யை வீழ்த்த அவர்களையும் ஒன்றிணைத்திருப்பது முற்போக்கான அரசியல் நகர்வு. இஸ்லாமிய சமூகத்தையும், பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளை பிற்போக்கு சக்திகளாக புறந்தள்ளி விட முடியாது.

சிறுபான்மை சமூகம் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் சமூகம். அதே போல பட்டியலினத்தவர்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடக்கூடியவர்கள். நாம் உருவாக்கும் மாற்று அணி என்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பாஸிசத்தை எதிர்க்கும் மாற்று அணியாக இருக்க வேண்டும் என்றார்.

மத அடிப்படையில் ஒருங்கிணைப்பதால் தான் அவர்களால் ஆட்சிக்கு வர முடிந்துள்ளது. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து ராஷ்டிரத்தை அமைத்து மனு ஸ்மிருதியை அரசியலமைப்பு சட்டமாக்கி விடுவார்கள். அவர்களால் வீழ்த்த முடியாத மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. அதன் காரணமாக வட இந்தியர்களை தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ வைக்கிறார்கள்.

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வேலை வாய்ப்பிற்கு மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வாழ்க, சமூக நீதி வெல்க, பெரியார் வாழ்க என முழக்கமிட்ட தமிழ் மண்ணில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை திணித்து வருகிறார்கள். அவர்களை நாம் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும்" என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன்

இதையும் படிங்க: 26/11 மும்பை தாக்குதல் - பொது மக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.