தமிழ்நாடு

tamil nadu

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது!

By

Published : Jul 16, 2023, 7:20 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய 27 வயது இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தையை கூறி ஆறு மாத கர்ப்பமாக்கியதை அடுத்து, அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 15 வயது சிறுமி திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் மாணவியிடம் இது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அந்த சிறுமி, 52 வயது நபர் ஒருவர் தன்னிடம் நெருங்கி பழகியதாகவும், பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறி உள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், அதனாலேயே பயந்து போய் வெளியே சொல்லாமல் இருந்ததாகவும் மாணவி கதறி அழுதபடி பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

பின்னர், மாணவியின் பெற்றோர் அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, புகாருக்கு ஆளான நபர் அத்துமீறி மாணவியிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைந்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராஜ்ய சபா எம்பி ஆகிறார் அண்ணாமலை? - ராஜஸ்தானில் இருந்து தேர்வாக உள்ளதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details