தமிழ்நாடு

tamil nadu

முதலாளியிடம் பணத்தை ஒப்படைக்காமல் தப்பிச்சென்ற பணியாளர் கைது

By

Published : Sep 12, 2022, 10:12 AM IST

Etv Bharat

தென்காசி அருகே முதலாளியிடம் பணத்தை ஒப்படைக்காமல் சுமார் 18 லட்ச ரூபாயுடன் தப்பிச்சென்ற பணியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தென்காசி: சங்கரன்கோவிலை சேர்ந்த முத்தையாபிள்ளை என்பவர் அதே ஊரில் கமிஷன் கடை ஒன்றும், மிளகாய் வற்றல், பருத்தி, கடலை உள்ளிட்ட விவசாய பொருட்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

முத்தையா பிள்ளையிடம் பணிபுரியும் செல்வம்( 28 ), ஜோதி ரமேஷ் (25) இருவரும் தரம் பிரிக்கப்பட்ட விவசாயப் பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டு அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சங்கரன் கோவில் வந்து முதலாளியிடம் ஒப்படைப்பது வழக்கம்.

நாளடைவில் முத்தையாபிள்ளையின் நம்பிக்கையை பெற்ற இருவரும் ஏற்றுமதி செய்துவிட்டு லட்சக்கணக்கில் பணத்தைகொண்டு வருவது வாடிக்கையான நிலையில், செல்வத்திற்கு சையத் அலி(38 )என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. பணத்த்தை எடுத்து வா, பங்கு போட்டுக் கொள்ளலாம் என சையத் அலி யோசனை கூறியுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரைக்குச் சென்று பொருட்களை இறக்குமதி செய்துவிட்டு 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை முத்தையா பிள்ளையிடம் ஒப்படைக்காமல் செல்போன்களை சுச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகினர்.

இதனையடுத்து சுப்பையா பிள்ளை சங்கரன்கோவில் நகர காவல் துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வம், ஜோதி ரமேஷ், சையது அலி, சித்ரா, கிருஷ்ணசாமி, தன்ராஜ், சபாபதி, வன்னிய ராஜா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.

இதையும் படிங்க:விரைவில் தேசிய கட்சி - தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர்

ABOUT THE AUTHOR

...view details