தென்காசி மாவட்டம் புளியரையை அடுத்து பகவதிபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி என்பதால் விவசாய நிலங்களில் வனவிலங்கு அட்டகாசம் தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது கேரளாவில் சபரிமலை, பம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர், உணவு தேடி தமிழ்நாடு வனப்பகுதிக்குள் வந்த வண்ணம் உள்ளன.
காட்டுயானைகள் அட்டகாசம்: இயற்கை தடுப்பு மருந்துகளை கையாளும் வனத்துறை
தென்காசி: புளியரை அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளது.
இந்நிலையில் பகவதிபுரம் விவசாய நிலங்களில் கடந்த இரண்டு நாள்களாக காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. காட்டு யானைகள் கூட்டமாக வந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக செங்கோட்டை வனச்சரகர் பாண்டியராஜன் தலைமையில் வன அலுவலர்கள் யானை வழித்தடங்களை கண்டறிந்து 'நீலிமா' எனும் தடுக்கும் இயற்கை தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் காட்டு யானைகளை காட்டுப் பகுதிகள் அனுப்புவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.