தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு பாதிப்பால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு!

By

Published : Aug 20, 2020, 1:42 AM IST

தென்காசி: ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் வராததால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு
மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு

தென்காசி மாவட்டம் அருகேயுள்ள தேன்பொத்தை, இலஞ்சி, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், கடையநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர்.

இங்கு தயாராகும் மண்பாண்டங்கள் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து மண்பாண்டங்களை வாங்கிச் செல்வார்கள்.

மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு

இந்நிலையில் கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்ற வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இப்பகுதியில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் வியாபாரம் ஆனது. தற்போது விநாயகர் சிலைகள் தயார் செய்து வைத்தும் கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வாங்க வருவதில்லை என அதன் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் மண்பாண்டத் தொழிலுக்கு உயிர் கொடுக்கும் பட்டதாரி இளைஞர்கள்!


ABOUT THE AUTHOR

...view details