தமிழ்நாடு

tamil nadu

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்ற சார்பதிவாளர் உள்பட இருவர் கைது

By

Published : Sep 30, 2022, 9:48 AM IST

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்ற சார்பதிவாளர் உள்பட இருவர் கைது

தென்காசியில் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சார்பதிவாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான 1.75 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தை போலியான ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு செய்ததாக கண்ணன், தென்காசி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர், தென்காசி (எண் 1) சார்பதிவாளர் மணி மற்றும் நிலத்தை வாங்கிய சோமசுந்தர பாரதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதேநேரம் நிலத்தை கிரயம் வாங்கியதாக பவுன்ராஜ், முகமது ரஃபிக் மற்றும் லலிதா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் எனக்கூறி 10 லட்சம் மோசடி செய்ய முயன்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details