தமிழ்நாடு

tamil nadu

தொடங்கியது சீசன், குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

By

Published : Jul 16, 2022, 3:43 PM IST

குற்றாலத்தில் சீசன் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், அங்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

குற்றாலத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
குற்றாலத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்களாகும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதும் தென்காசி, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான வெயிலுடன் இடைவிடாது சாரல் மழை பெய்து வரும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி வரை பருவ மழை பெய்யாததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

குற்றாலத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை மட்டும் பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தென்காசி, கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை

ABOUT THE AUTHOR

...view details