தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் பரபரப்பு:மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சியினருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு!

By

Published : Jul 15, 2023, 4:00 PM IST

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

alcohol abolition protest
மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசி:கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உத்தரவின் பேரில் மது ஒழிப்பை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடை முன்பு மதுபாட்டில்கள் உடைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு

அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டிருந்தது. இதனால் போராட்டமானது பிரதான சாலையில் நடைபெற்றது. இதனையடுத்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மிகப்பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், குறிப்பாக காவல் ஆய்வாளர் மாதவன் மற்றும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:சரத் பவார் வீட்டிற்குச் சென்ற அஜித் பவார் - மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் திருப்பம்?

ABOUT THE AUTHOR

...view details