தென்காசி: 50 லட்சம் வரை சுயத்தொழில் தொடங்கிடவும், 2014ல் இருந்து 2021 ஆம் நிதியாண்டு வரை திவ்யாஞ்சன் உரிமை பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக 2000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள தனியார் மாற்றுத்திறனாளிகள் சேவா நிறுவனமான, அமர்சேவா சங்கத்தின் சூரிய ஒளி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய ஒளி மின்விளக்கு வசதிகள் கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (அக்.22) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, திட்டங்களை திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மேடையில் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு 50 லட்சம் வரை சுயத்தொழில் தொடங்கிடவும், வாழ்க்கையில் மேம்பட வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகும் கூறினார். மேலும், 2014 - 2021 ஆம் நிதி ஆண்டில், திவ்யாஞ்சன் உரிமை பிரிவில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு மூலம் 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.