தமிழ்நாடு

tamil nadu

தென்காசி வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ - பல்லாயிரக்கணக்கான மூலிகை மரங்கள் எரிந்து நாசம்!

By

Published : Aug 9, 2023, 4:32 PM IST

கடையநல்லூர் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான மூலிகை மரங்கள் எரிந்து நாசமானது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீவிர நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

forest-fire-in-tenkasi-forest-thousands-of-herb-trees-were-destroyed
தென்காசி வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டு தீ

தென்காசி வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டு தீ

தென்காசிமாவட்டம், கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி பீட் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் அரியவகை மூலிகைகளும், விலை உயர்ந்த மரங்களும், ஏராளமான உயிரினங்களும் வசித்து வருகின்றனர்.

பனிகுறைந்து தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் சொக்கம்பட்டி வனப்பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து பரவி இரவு நேரத்திலும் மளமளவென பற்றி எரிந்து வருகிறது.

இதனையடுத்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தொடர் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலையில் ஆரம்பித்த இந்த தீயானது இரவு முழுவதும் அதிகமாக காணப்பட்டது. இதனால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க :தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்!

இந்த நிலையில் தற்போது மலைப்பகுதி முழுவதும் தீப்பிடித்து வருவதினால் அரிய வகை மூலிகைச் செடிகள், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாவதோடு மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அச்சமடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து காய்ந்து கிடக்கின்றது. காற்றின் வேகத்தால் அந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. தற்போதும் அதேபோல் மலையில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவி வருகிறது. அதனை அணைக்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தால் வன உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த தீயை விரைந்து அனைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும்; முதலில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன உயிர் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க :"பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல.. அவரை கொன்றவர்கள்.." மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்!

ABOUT THE AUTHOR

...view details