தமிழ்நாடு

tamil nadu

Video:அமைச்சருக்காக 3 மணி நேரம் காத்திருந்த இளைஞர்கள்.. செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் பெரியகருப்பன்!

By

Published : Jul 19, 2022, 6:40 PM IST

அமைச்சருக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த நிலையில், அதனை செய்தியாக வெளியிட்ட செய்தியாளரை அமைச்சர் பெரியகருப்பன் மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அமைச்சருக்காக 3 மணி நேரம் காத்திருந்த இளைஞர்கள்.. செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் பெரியகருப்பன் - வைரலாகும் வீடியோ!
அமைச்சருக்காக 3 மணி நேரம் காத்திருந்த இளைஞர்கள்.. செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் பெரியகருப்பன் - வைரலாகும் வீடியோ!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்த வேலையை நாடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புப்பயிற்சி அளிப்பதற்கான இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் காலை 10 மணிக்கு தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதனால் படித்த இளைஞர்கள் விழா அரங்கிற்குள் காலை 8 மணிக்கு அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர். அப்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் ஒரே அறையில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டது குறித்து செய்தியாளர் செய்தி வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து காலை 11.45 மணிக்கு விழா நடைபெறும் கல்லூரிக்கு வருகை தந்த அமைச்சர் பெரியகருப்பன், அங்கு இருந்த செய்தியாளரை காரில் இருந்து இறங்கி அடிப்பது போல் வந்து மிரட்டினார். அதை கேமராவில் பதிவு செய்தது தெரிந்து கொண்டவுடன், அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் பெரியகருப்பன் - வைரலாகும் வீடியோ!

இதற்கிடையில் இதுகுறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!

ABOUT THE AUTHOR

...view details