தமிழ்நாடு

tamil nadu

வெடித்து சிதறிய மர்ம பொருள்: மூன்று சிறுவர்கள் படுகாயம்

By

Published : Oct 26, 2021, 8:27 AM IST

வெடித்து சிதறிய மர்ம பொருள்  மர்ம பொருள் வெடித்து சிறுவர்கள் படுகாயம்  சிவகங்கை செய்திகள்  சிவகங்கையில் வெடித்து சிதறிய மர்ம பொருள்  three school boys injured  sivagangai news  sivagangai latest news  three school boys injured by mystery object blast  mystery object blast in sivagangai
வெடித்து சிதறிய மர்ம பொருள் ()

மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிவகங்கை:கீழகுளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், திடீரென ஒரு மர்ம பொருளை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த மர்ம பொருள் வெடித்ததில் கிஷோர் (8), நவீன்குமார் (13), வைணவன் (11) ஆகிய மூன்று சிறுவர்களும் விபத்துக்குள்ளாகி உள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் கிஷோர்குமார் மிக மோசமான நிலையில் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்ற இருவருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வெடித்தது மர்ம பொருளா, அல்லது அப்பகுதியில் யரேனும் வெடிகுண்டை விட்டு சென்றனரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்படு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: இரும்பு குழாய்கள், மோட்டார்களை திருடிய நான்கு பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details