தமிழ்நாடு

tamil nadu

கச்சநத்தம் படுகொலை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள் - சிவகங்கை நீதிமன்றம்

By

Published : Aug 1, 2022, 9:14 PM IST

கச்சநத்தம் படுகொலை

தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என சிவகங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை: திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஊருக்குள் புகுந்த சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் உள்ளிட்ட மூவரை படுகொலை செய்தனர்.

இந்த படுகொலை வழக்கில் சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகளாக கருதப்படும் அக்னி, பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.

வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) நீதிபதி முத்துக்குமரன் 27 பேர் குற்றாவாளிகள் என தெரிவித்து, தண்டனை வருகிற 3ஆம் தேதி வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: சகோதரியின் மகளை கொலை செய்த 15 வயது சிறுமி - அதிர்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details