தமிழ்நாடு

tamil nadu

தனியார் பள்ளி வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு... மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்...

By

Published : Oct 16, 2022, 12:58 PM IST

சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி கீழே விழுந்த கல்லூரி மாணவன் மீது பின்னே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியால் உயிரிழப்பு ஏற்பட்டது.

தனியார் பள்ளி வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு
தனியார் பள்ளி வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சிவகங்கை அருகே சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவன் கீழே விழுந்ததில் பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் திருப்பதி நகரை சேர்ந்த செல்வக்குமாரின் மகன் பிரகதீஸ்வரன்(18). இவர் சிவகங்கையில் உள்ள மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போது காஞ்சிரங்கால் பகுதியில் செல்லும்போது சாலையின் குறுக்கே திடிரென மாடு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. அதில் மோதிய பிரகதீஸ்வரன் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழேவிழுந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி பேருந்து அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரின் உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:காணாமல் போன பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு - தகாத உறவினால் விபரீதம்

ABOUT THE AUTHOR

...view details