தமிழ்நாடு

tamil nadu

50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கண்மாய்... விருந்து வைத்த விவசாயிகள்...

By

Published : Sep 24, 2022, 10:48 PM IST

Updated : Sep 24, 2022, 11:02 PM IST

50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மட்டிக்கண்மாய்- விருந்து வைத்த விவசாயிகள்...

சிவகங்கையில் உள்ள மட்டிக்கண்மாய் 50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதால், அப்பகுதி விவசாயிகள் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் உள்ள மட்டிக்கண்மாய் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, சிங்கம்புணரி, மணப்பட்டி, குமரத்தகுடிப்பட்டி, காளாப்பூர் ஆகிய ஆறு கிராமங்களில் சுமார் 2,500 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கண்மாய்... விருந்து வைத்த விவசாயிகள்...

பருவ மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் தேங்குவது வழக்கம். ஆனால், முழுமையாக நிரம்பாது. இந்த நிலையில், தொடர் கனமழையால் சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் மட்டிக்கால்வாய் வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டு மட்டிக்கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அதோடு 50 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக நிரம்பியதாக தெரிவித்தும், அதனை கொண்டாடும் விதமாக 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:நிரந்தர பணிநீக்கம் ? - சிறையில் அடம் பிடித்த சவுக்கு சங்கர்

Last Updated :Sep 24, 2022, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details