தமிழ்நாடு

tamil nadu

தனியார் பள்ளி வாகனம் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து - 10 குழந்தைகள் காயம்!

By

Published : Aug 5, 2022, 10:13 PM IST

தனியார் பள்ளி வாகனம் - கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து - 10 குழந்தைகள் காயம்..!

தனியார் பள்ளி வாகனம் கேஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது மோதிய விபத்தில் 10 குழந்தைகள் காயமடைந்ததுடன் அதில் 1 குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் தனியார் பள்ளியானது இயங்கிவருகிறது. இன்று(ஆகஸ்ட் 05) மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து அதே பள்ளிக்குச்சொந்தமான வாகனத்தில் பெருமாள்பட்டி, ஈசனி, சோழபுரம், ஒக்கூர் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பெருமாள்பட்டி சுற்றுவட்டார சாலை அருகே செல்லும்போது திருப்பத்தூர் பகுதியில் இருந்து இளையான்குடி நோக்கிசென்ற கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இதில் 10 குழந்தைகள் காயமடைந்ததுடன் அதில் 1 குழந்தை படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து அறிந்து அங்குவந்த பெற்றோர்கள் குழந்தைகளை கண்டு கண்ணீர் வடித்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான பள்ளி வாகனமானது இன்ஸ்யூரன்ஸ், எஃப்.சி, புகை பரிசோதனை அனைத்தும் காலாவதியாகியுள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் அந்த வாகனத்தை இயக்கி வருவது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே பள்ளியில் தொடர்ந்து வாகனம் விபத்து ஏற்படுவதுடன் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் 5ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'விருப்ப ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியப்பலன்கள் கிடையாது!' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details