தமிழ்நாடு

tamil nadu

Salem: பிரம்மாண்டமான கருணாநிதி சிலை, புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு!

By

Published : Jun 11, 2023, 10:36 PM IST

சேலம் அண்ணா பூங்காவில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர திருவுருவ சிலையையும், புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

salem
கருணாநிதி

கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் ஸ்டாலின்

சேலம்:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் பயணமாக நேற்று சேலம் சென்றார். இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி (karunanidhi centenary celebrations) சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை (Salem Karunanidhi Statue) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) திறந்து வைத்தார்.

16 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, பிறகு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிலை சிறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஓய்வூதியதாரர்கள் தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்க: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கட்டி முடிக்கப்பட்ட சேலம் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் பழைய பேருந்து நிலையத்தை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பயணத்தையும் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: கருணாநிதி மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் அவுட்சோர்சிங்-ல் பணியாளர்கள் நியமனம்.. யாருக்கு பயன் தரும்?

இந்த ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு மாநகர பேருந்து நிலையம்' (M.Karunanidhi Centenary Municipal Bus Stand) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளில் பேருந்து நின்று செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் 80 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கும் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானம், வஉசி பூ மார்க்கெட், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 170.31 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிடவுள்ளார்.

இதையும் படிங்க: MK Stalin: சேலமும், கருணாநிதியும்.. ஸ்டாலின் கூறிய குட்டிக் கதை!

ABOUT THE AUTHOR

...view details