தமிழ்நாடு

tamil nadu

’யாரும் என்னைக் கடத்தவில்லை... விருப்பப்பட்டே சென்றேன்’ - இளமதி வாக்குமூலம்

By

Published : Mar 16, 2020, 10:52 PM IST

elamathi intercaste marriage case
elamathi intercaste marriage case

சேலம்: சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இளமதி தான் விருப்பப்பட்டே பெற்றோருடன் சென்றதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன், இளமதி ஆகியோர் கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இளமதியின் குடும்பத்தினர் அன்றைய தினம் இரவு செல்வன், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஈஸ்வர் ஆகியோரை தாக்கிவிட்டு இளமதி அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக செல்வன், ஈஸ்வர் ஆகிய இருவரும் கொளத்தூர் காவல் நிலையத்தில் இளமதியைக் கடத்திச் சென்றதாகப் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளமதியின் தந்தை உள்பட 18 பேரைக் கைது செய்தனர். இதனிடையே கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இளமதி கடந்த 14ஆம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இளமதி நீதிமன்றத்தில் ஆஜர்

அப்போது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், விரும்பியே பெற்றோருடன் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் இளமதியை சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இளமதி தனது விருப்பப்படியே பெற்றோருடன் சென்றதாகக் கூறியதால், அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி

ABOUT THE AUTHOR

...view details