தமிழ்நாடு

tamil nadu

மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பாஜக எம்எல்ஏ ஆய்வு

By

Published : Sep 27, 2022, 11:43 AM IST

மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஆய்வு

சேலத்தில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் வீட்டில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

சேலம்அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் (செப் 25) அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக எஸ்டிபிஐ அமைப்பின் மாவட்ட தலைவர் சையத் அலி உள்ளிட்ட இருவரை அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மாநிலம் முழுவதும் பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு தாக்குதல் நடந்து வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் தலைமையிலான குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் சேலம் மற்றும் வேலூர் பெருங்கோட்டப் பகுதிக்கு மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி தலைமையிலான குழு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் வீட்டிற்கு, சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் டெய்சி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஆய்வு

அப்போது ராஜன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்டறிந்தனர். ஆய்வுக்குப் பின்னர் எம்எல்ஏ சரஸ்வதி கூறுகையில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் சேலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது.

என்ன காரணத்தால் நடந்தது? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என ஆராயப்பட்டது. முன்விரோதம் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இது தொடர்பான ஆய்வறிக்கை மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். திமுக அரசு ஆட்சிக்கு வரும் சமயங்களில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்...பிஎப்ஐ பொறுப்பாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details