தமிழ்நாடு

tamil nadu

வாட் வரியைக் குறைக்காத திமுக அரசு: 'தக்காளி மாலை' ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 23, 2021, 9:35 AM IST

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காமல் உள்ள திமுக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையில், தக்காளி மாலையை ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தக்காளி மாலை ஏந்தி பாஜகவினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொலி
தக்காளி மாலை ஏந்தி பாஜகவினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொலி

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மாநில அரசானது பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வலியுறுத்தி, பாஜக சார்பில் நேற்று (நவம்பர் 22) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, திமுக அரசைக் கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தக்காளி மாலை ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில், பாஜகவைச் சேர்ந்த பெண்கள் 'தக்காளி மாலை' ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:Rowdy baby surya-வைக் கைது செய்... இளம்பெண் குமுறல்

ABOUT THE AUTHOR

...view details