தமிழ்நாடு

tamil nadu

வாலாஜாபேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் 'சுதர்சன ஹோமம்'

By

Published : Jan 22, 2023, 10:06 PM IST

Etv Bharat

தை மாத திருவோணத் திருவிழாவையொட்டி, வாலாஜாபேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த சுதர்சன ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

வாலாஜாபேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் 'சுதர்சன ஹோமம்'

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகரத்தில் ஆற்காடு நவாப் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ராயாஜி அப்பண்ண பண்டிதரால் கட்டப்பட்ட ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் தை மாத திருவோண 20ஆம் ஆண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (ஜன.22) சுதர்சன ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத திருவோணத் திருவிழா நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தாண்டுக்கான திருவோணத் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ திருமஞ்சனம் அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவருடன் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து இங்கு குழந்தைப்பேறு, கடன் பிரச்னை தீர்வு, தொழில் முன்னேற்றம், குடும்பப் பிரச்னை, கல்வி வளர்ச்சி, பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை விலகிட வேண்டும் என திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நடந்த மஹா சுதர்சன ஹோமம் பூர்ணாவதி ஆகிய ஹோமத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரதராஜ பெருமாளை 'கோவிந்தா! கோவிந்தா' எனப் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

இதையும் படிங்க: ஈஷாவில் இருந்து வெளியே வந்த சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தீவிர நடவடிக்கை தேவை - நயினார் நாகேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details