தமிழ்நாடு

tamil nadu

தேவர் குருபூஜை - பசும்பொன் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

By

Published : Oct 29, 2022, 10:41 PM IST

Etv Bharat

முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது குருபூஜை மற்றும் பிறந்த நாளை ஒட்டி பசும்பொன் கிராமத்திற்கு நாளை (அக்.30) நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது குருபூஜை மற்றும் பிறந்த நாள் விழா நாளை (அக்.30) ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.

முதலில் இந்த குருபூஜையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அவருக்கு ஏற்பட்ட முதுகு வலியின் காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு பதில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் செல்வார்கள் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் நாளை பசும்பொன் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்லவில்லை

ABOUT THE AUTHOR

...view details