தமிழ்நாடு

tamil nadu

பாம்பன் பாலத்தில் சென்சார் சீரமைப்பு

By

Published : Jul 3, 2021, 7:40 PM IST

பாம்பன் பாலத்தில் ஏற்பட்டுள்ள உணர்கருவி (sensor) கோளாறை சீரமைத்து, சோதனை ஓட்டம் நடத்திய பின்னரே ரயில் இயக்கம் குறித்து அறிவிக்கப்படும் என பாம்பன் பராமரிப்பு பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Pamban Rail sensor test  sensor alignment work on Pamban Bridge  ramanathapuram news  ramanathapuram latest news  ramanathapuram Pamban Bridge sensor alignment  Pamban Bridge sensor alignment  பாம்பன் பாலம்  ராமநாதபுரம் செய்திகள்  பாம்பன் பாலத்தில் சென்சார் சீரமைப்பு  பாம்பன் பாலத்தில் சென்சார் கோளாறு  சென்சார் சீரமைப்பு  ரயில் நேரம்
சென்சார் சீரமைப்பு

ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள உணர்கருவி (sensor), கடந்த ஜூன் 29ஆம் தேதி பழுதடைந்தது. இதன் காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

உணர்கருவி (sensor) கோளாறு

இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில், மண்டபத்திலிருந்து இயக்கப்படுகின்றது. மேலும் உணர்கருவியை (sensor) சீர் செய்வதற்காக, ஜூன் 29 அன்று சென்னையிலிருந்து ஐஐடி குழுவினரை வரவழைத்து சரி செய்தனர்.

பின் ரயில் எஞ்ஜின் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்த பிறகு, ரயில்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஜூன் 30ஆம் தேதி மீண்டும் உணர்கருவியின் (sensor) கணக்கீட்டில் மாறுபாடு இருந்ததன் காரணமாக ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டது.

சீரமைப்புப்பணி

தற்போது உணர்கருவியை (sensor) சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணர்கருவியை (sensor) சீரமைத்து, ரயில் எஞ்ஜினை இயக்கி சோதனை ஓட்டத்தை செய்ய இருப்பதாக, பாம்பன் பராமரிப்பு பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கணக்கீடு சீராக வந்த பின்ரே ரயில் இயக்குவது குறித்து, ரயில்வே துறையினர் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 'ராஜகோபுர வேலைப்பாடுகள் உயிரோட்டமற்று இருக்கிறது' - திருத்தம் சொல்லி சேகர் பாபு

ABOUT THE AUTHOR

...view details