தமிழ்நாடு

tamil nadu

பரமக்குடி, முதுகுளத்தூர் ஒன்றியக் குழு தேர்தலில் அதிமுகவினர் வெற்றி!

By

Published : Feb 1, 2020, 11:25 AM IST

ராமநாதபுரம்: பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்த ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெற்றனர்.

indirect election
மறைமுக தேர்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் பரமக்குடி, முதுகுளத்தூர் ஒன்றியங்களில் நடந்த துணைத் தலைவர் தேர்தலுக்கு பெரும்பான்மையான ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் ஏழு பேரும், திமுக உறுப்பினர்கள் ஆறு பேரும் இருந்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான தேர்தலில் அதிமுக உறுப்பினர் சரயு ராஜேந்திரனும், திமுக சார்பில் ம.நதியாவும் போட்டியிட்டனர். இதில் சரயு ராஜேந்திரன் ஏழு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ம.நதியா ஆறு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் முதல் வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கண்ணகி ஜெகதீசன் அதிமுகவில் இணைந்ததை அடுத்து அவர் துணைத்தலைவருக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க: பொள்ளாச்சி அருகே ஊராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Intro:இராமநாதபுரம்
ஜன.30

பரமக்குடி, முதுகுளத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்Body:இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி நடைபெற்றது. இதில் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியங்களில் மதியம் நடந்த துணைத் தலைவர் தேர்தலுக்கு பெரும்பான்மையான ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், திமுக உறுப்பினர்கள் 6 பேர். இன்று நடந்த தேர்தலில் 7வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சரயு ராஜேந்திரனும், திமுக சார்பில் 13வது வார்டு உறுப்பினர் ம.நதியாவும் போட்டியிட்டனர். இதில் சரயு ராஜேந்திரன் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ம.நதியா 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் முதல் வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கண்ணகி ஜெகதீசன் அதிமுகவில் இணைந்துவிட்டார். தற்போது இவர் துணைத் தலைவருக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details