தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

By

Published : Nov 4, 2022, 10:27 PM IST

Etv Bharat

ராமேஸ்வரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி வரை திருப்பதி எக்ஸ்பிரஸ் (Tirupati Express) இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை சந்திப்பு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி வழியாக திருப்பதி சென்றடையும்.

வழக்கமாக மாலை 04:52 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் தொழில்நுட்பக் காரணங்களால் இன்று (04.11.2022) வெள்ளிக்கிழமை 6:40 நிமிடங்கள் தாமதமாக இரவு 11 மணிக்குப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:மூச்சுத்திணறும் நாட்டின் தலைநகரம் - காற்று மாசு அதிகரிப்பு குறித்து இருகட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details