தமிழ்நாடு

tamil nadu

முத்துராமலிங்கனார் குருபூஜை: சசிகலாவுக்காக மனுகொடுத்த அதிமுகவினர்!

By

Published : Oct 21, 2021, 2:36 PM IST

பசும்பொன் முத்துராமலிங்கனார் குருபூஜைக்கு ராமநாதபுரம் வந்து, அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முத்துராமலிங்கனார் குருபூஜை அதிமுக மனு
முத்துராமலிங்கனார் குருபூஜை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவிடத்தில், அவரின் 114ஆவது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை விழாவும் வருகின்ற அக்.28ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட உள்ளது.

இதையடுத்து, அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சரவணன், அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் மனு கொடுத்தனர்.

ஆட்சியரிடம் மனு கொடுத்த அதிமுகவினர்

ஆட்சியரிடம் மனு

அதில், வருகின்ற அக். 29ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல், 11 மணிக்குள் பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவிடத்தில் வி.கே.சசிகலா வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அவர்களுக்கான உரிய காவல்துறை பாதுகாப்பு, வாகன அனுமதி ஆகியவற்றை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சசிகலா பசும்பொன் முத்துராமலிங்கனார் குருபூஜைக்கு வருவதற்கு அனுமதி கோரி மனு கொடுத்தது ராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு பின்... தமிழ்நாடு முழுக்க சசிகலா சூறாவளி சுற்றுப்பயணம்!

ABOUT THE AUTHOR

...view details