ETV Bharat / city

தீபாவளிக்கு பின்... தமிழ்நாடு முழுக்க சசிகலா சூறாவளி சுற்றுப்பயணம்!

author img

By

Published : Oct 21, 2021, 12:51 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு சுற்றுலா மேற்கொண்டு, சசிகலா தனது ஆதரவாளர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

SASIKALA, சசிகலா, ஜெயலலிதா நினைவிடம், sasikala in jeyalalitha memorial
திபாவளிக்கு பிறகு சசிகலா அடிக்கும் தமிழ்நாடு ட்ரிப்

சென்னை: கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவில் தன்னை இணைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆடியோ பதிவுகள் மூலம் தனது ஆதரவாளர்களுடன் பேசி வந்த சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி விட்டு தனது ஆதரவாளர்களை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது,"என் வாழ்நாளில் அதிகமான நாள்களை ஜெயலலிதாவுடன் கழித்திருக்கிறேன். ஆனால், ஜெயலலிதாவின் மறைவை அடுத்துள்ள ஐந்து வருட காலத்தில், என் மனதில் பெரும் பாரம் பற்றிக்கொண்டது.

SASIKALA, சசிகலா, ஜெயலலிதா நினைவிடம், sasikala in jeyalalitha memorial
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா

முன்னாள் தலைவர்களுடனும்...

என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா சமாதியில் இன்று (அதாவது அக். 16) இறக்கி வைத்துவிட்டேன். அம்மாவும், தலைவரும் (எம்ஜிஆர்) என்றுமே மக்கள் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டவர்கள். தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்தை நினைத்து பயணித்தவர்கள்.

இன்று ஜெயலலிதா சமாதியில் வைத்து அவரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறினேன். கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் உறுதியளித்தேன். அதிமுகவை ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் பின்புலத்தில் இருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

SASIKALA, சசிகலா, ஜெயலலிதா நினைவிடம், sasikala in jeyalalitha memorial
சசிகலா உடன் ஓபிஎஸ் - இபிஎஸ்

சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் அதிமுகவினர் இடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளன. தீபாவளிக்கு பின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து ஒரு வாரம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட இருக்கிறார்.

அதேபோல், அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முக்கிய முன்னாள் தலைவர்களை சந்தித்தும் ஆதரவு திரட்ட உள்ளார்.

இதையும் படிங்க: 'அம்மா உணவகத்துக்கு ஆபத்து; சலசலப்பை ஏற்படுத்தும் சசிகலா'- ஜெயக்குமார் பாய்ச்சல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.