தமிழ்நாடு

tamil nadu

9 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சந்திரகலா

By

Published : Aug 15, 2021, 2:36 PM IST

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்ட பயனாளிகள் எட்டு பேர் உள்பட 25 பயனாளிகளுக்கு 9.10 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா
மாவட்ட ஆட்சியர் சந்திரகலா

ராமநாதபுரம்: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மூவர்ண தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஏற்றி 25 பயனாளிகளுக்கு ஒன்பது லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதிப் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 29 பேர், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 124 அலுவலர்களுக்கு பணி பாராட்டு நற்சான்று வழங்கினார்.

தொடர்ந்து ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டப் பயனாளிகள் எட்டு பேர் உள்பட 25 பயனாளிகளுக்கு 9.10 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவில் டிஐஜி மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details